டியானா யுடாரை மூடச் சொல்லாதது ஏன்?

razaliடிஏபி-இன்  தெலோக்  இந்தான்  வேட்பாளர்  டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்,  பூமிபுத்ராக்களுக்கு  மட்டுமே  இடமளிக்கும்  யுனிவர்சிடி  டெக்னலோஜி மாரா(யுஐடிஎம்)-வைக்  குறைசொன்னது  அவர்மீது  வசைபாட பிஎன்னுக்கு  வசதியாகப்  போய்விட்டது.

நேற்று,  செய்தியாளர்களிடம்  பேசிய  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரும்  பிரதமர்துறை  துணை  அமைச்சருமான  ரசாலி  இப்ராகிம்,  யுஐடிஎம்-மைக்  குறைகூறும்  டியானா  மசீசா  உருவாக்கிய  துங்கு  அப்துல்  ரஹ்மான்  பல்கலைக்கழகம் (யுடார்)  பற்றி  எதுவும்  சொல்லாதது  ஏன்  என்று  வினவினார்.

“மலாய்  மாணவர்களுக்கு  முன்னுரிமை  கொடுக்கும்  யுஐடிஎம்  பற்றிக் கேள்விகேட்கும்  அவர், ஒரு  இனத்தைச்  சேர்ந்த  மாணவர்களே  அதிகம்  உள்ள  யுடார் பற்றி  எதுவும்  கேட்கவில்லையே.  அதையும்  மூடச்   சொல்ல  வேண்டியதுதானே?”,  என்றவர்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்தது.