தெலோக் இந்தானில் டிஏபி- பிஎன் நேரடிப் போட்டி

t intanதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்-குக்கும்  டிஏபி-இன்  டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்டுக்குமிடையில்  நேரடிப்  போட்டியாக  அமைகிறது.

டிஏபி,  அது  சீனர்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கும்  கட்சி  என்ற  குறைகூறலை  உடைத்தெறியும்  நோக்கில் அங்கு  வளர்ந்துவரும்  மலாய்  நட்சத்திரமான  டியானா-வைக்  களமிறக்குகிறது.

டியானா  இடைத்  தேர்தலில்  வெற்றி  பெற்றால்  டிஏபி-இன்  முதலாவது  மலாய்  பெண்  எம்பி  ஆவார். வெற்றி பெறுவது  எளிதாக  இருக்காது.  ஏனென்றால்,  அவரை  எதிர்ப்பவர்  பழுத்த  அரசியல்வாதியும்  கெராக்கானின்  நடப்புத்  தலைவருமான  மா  சியு  கியோங்.

மா, 1999-க்கும்  2008-க்குமிடையில்  இரண்டு  தடவை  அங்கு  போட்டியிட்டு  வென்றிருக்கிறார்.  ஆனால்,  2008-இல்  டிஏபி-இன்  எம்.மனோகரனிடமும்  கடந்த  ஆண்டு  மே  மாதம்,  காலஞ்சென்ற  சியா லியோங்  பெங்கிடமும்  அவர்  தோற்றார்.ஆனாலும், தம்  அரசியல்  அனுபவம்  அரசியலுக்குப்  புதியவரான  டியானாவை  வெல்ல  உதவும்  என்றவர்  நம்புகிறார்.