டெராஸ் பிஎன்னுக்குள் வரக் கூடாது: சிஎம்முக்கு எச்சரிக்கை

suppபார்டி  தெனாகா  ரக்யாட்  சரவாக்(டெராஸ்)-கை  பிஎன்னில்  சேர்த்துக்கொள்வது  பற்றி  நினைத்துக்கூட  பார்க்கக்  கூடாது  என சரவாக்  ஐக்கிய  மக்கள்  கட்சி (எஸ்யுபிபி),  முதலமைச்சர்  அடினான் சதேமுக்குக்  கடும்  எச்சரிக்கை  விடுத்துள்ளது.

“என்  கணிப்புப்படியும்  நாளேடுகளின்  செய்திகளின்படியும்  டெராஸ்  பிஎன்னில்  சேர்வதற்கு  எட்டு  பிஎன்  கட்சிகள்  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  என்பதால்  டெராஸ்  அனுமதிக்கப்படாது  என்றே  நம்புகிறேன்”,  என எஸ்யுபிபி  தலைவர்  பீட்டர்  சின்  நேற்றிரவு  கூறினார்.

அந்த  எட்டு  பிஎன்  கட்சிகளின்  பெயர்களை  சின்  குறிப்பிடவில்லை.  ஆனால்,  எஸ்யுபிபி,  எஸ்பிடிபி,  பார்டி  ரக்யாட்  சரவாக் (பிஆர்எஸ்)  ஆகியவை  அதற்கு  ஏற்கனவே  எதிர்ப்புத்  தெரிவித்துள்ளன.