ஈப்போ போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த தம் கணவர் காயமடைந்திருப்பதாக எம்.புஷ்பா,37, புகார் செய்துள்ளார்.
மே 14-இல், தம் கணவர் நினைவிழந்த நிலையில் ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் தீவிர கவனிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக போலீசிடமிருந்து தகவல் கிடைத்தது என புஷ்பா கூறினார்.
மே 7-இல், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரைச் சந்தித்தபோது நல்ல நிலையில் இருந்தார் என்பதால், அவரது இப்போதைய நிலை “மிகவும் கவலை தருவதாக” அவர் குறிப்பிட்டார்.
“மே 15-அன்றே புகார் செய்ய முயன்றேன். ஆனால் (போலீஸ்) அனுமதிக்கவில்லை……அதனால் இப்போது வழக்குரைஞர் உதவியை நாடியுள்ளேன்”, என புஷ்பா கூறினார். அவருடன் வழக்குரைஞர் எம்.குலசேகரனும் வந்திருந்தார்.
உண்மை நிலவரம் அறிய தொடர்ந்து போராடுங்கள்…. இதுவரை எத்தனை புகார்கள்??? எத்தனை இறப்புகள்??? ஐயோ, காவலே பயிரை அழிப்பதா???
இந்தியர்களின் விதி இது ஒரு தொடர் கதை பழகி விட்டது ஆண்டவன் ஒருத்தன் இருக்கிறான் அவன் பாத்து கொல்வான் என்று சொல்லி போக வேண்டியதன்
அம்மா! இது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்றால் போல ஒரு அரசாங்கம். எதைச் சொன்னாலும் அது தேச நிந்தனை. இல்லாவிட்டால் இஸ்லாமுக்கு எதிராக என ஒரு குற்றச் சாட்டு! வாக்குச் சீட்டு மூலம் தான் இதற்கு ஒரு முடிவு வரும்.
போலிசர் யாரையும் சும்மா அடிக்க மட்டார்கள். ஆனால் அச்செயல் அவர்கள் உயிரை பாதிக்கும் அளவுக்கு போகக்கூடாது ….
ஜெயில் என்பது நமது இனத்திற்கு பல்கலைக்கழகம் போன்றது. செய்த பாவங்களை போக்குவதற்கு அங்கு செல்வதுதான் உண்மையான தமிழனுக்கு அழகு. அந்த புண்ணிய பூமியில்தான் தமிழனுக்கு எத்தனை கொடுமைகள். நம்மின கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டு அங்குள்ளவர்களை கொடூரமாகத் தாக்கியும் கற்பழித்தும் வாயில் விஷம் ஊற்றியும் கொன்றதாக நெஞ்சைப் பதறச் செய்யும் செய்திகள் வரும் போதெல்லாம் வாய் மூடி மௌனமாக இருக்கும் நம் தலைவர்கள் ஜெயில் செத்துப் போனவர்களுக்காக மட்டும் அனுதாபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இதிலிருந்து ஜெயில் எவ்வளவு பவித்திரமான இடம் என்பது தெரிகிறது. ஆகவே மக்களே மறவாமல் ஜெயிலுக்கு செல்லுங்கள் புண்ணியம் பெறுங்கள் நன்றி வணக்கம்.
எங்கே போனார்கள் ம இ க வளகரிஞ்சர்கள் .
mIC lawyers only கு..UMNO