மசீச: ரசாலி யுடாரை இன விவகாரமாக்குவது தப்பு

liowஅம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  ரசாலி  இப்ராகிம், மசீச-வுக்குச்  சொந்தமான  துங்கு  அப்துல்  ரஹ்மான்  பல்கலைக்கழகத்தை  இன விவகாரமாக்கியது  தப்பு  என  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  கூறினார்.

பூமிபுத்ராக்களுக்கு  மட்டுமே  இடமளிக்கும்  யுனிவர்சிடி  டெக்னலோஜி  மாராவைக்  குறைகூறும்  தெலோக்  இந்தான்  வேட்பாளர் டியானா சோப்யா  முகம்மட்  டாவுட்  மசீச  உருவாக்கிய  துங்கு  அப்துல்  ரஹ்மான்  பல்கலைக்கழகம் (யுடார்)  பற்றி  எதுவும்  சொல்லாதது  ஏன்  என  ரசாலி  வினவியதாக  பெர்னாமா  அறிவித்திருந்தது.

“ரசாலி தப்பாக  பேசியுள்ளார். யுடாரில்  குறிப்பிட்ட  ஓர்  இனம்  மட்டுமே  ஆதிக்கம்  செலுத்தவில்லை. அதில், இன  வேறுபாடின்றி  யாரும்  சேரலாம்”,  என லியோ  கூறினார்.

பிரதமர்துறை  துணை  அமைச்சரான  ரசாலி என்ன  பேசுகிறோம்  என்பதைப்  புரிந்துகொண்டு  பேசுவது  நல்லது  என்றாரவர்.