ஊடகங்கள் கவனிப்பதில்லை: சுயேச்சை வேட்பாளர் வருத்தம்

abuபுக்கிட்  குளுகோர்  இடைத் தேர்தலில்  போட்டியிடும்  இரு  சுயேச்சை  வேட்பாளர்களில்  ஒருவரான  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஊடகங்கள்  தம்மைப்  பற்றிச்  செய்தி  சேகரிப்பதில்லை  என  வருத்தப்படுகிறார்.

இதனால்  வெறுப்படைந்த  அவர்  ஒரு  கட்டத்தில்  தேர்தலிலிருந்து  விலகிக்  கொள்வது  என்ற  முடிவுக்குக்கூட  வந்துவிட்டதாக  கண்களில்  நீர்மல்கக்  குறிப்பிட்டார்.

“ஊடகங்களை  நினைத்தால்  வெறுப்பாக  இருக்கிறது. ஊடகங்கள்  செய்தி  சேகரிக்காவிட்டால்  நான்  எதற்காக  போட்டியிட  வேண்டும்? மக்களுக்காகத்தானே  போராடுகிறேன்.

“புறக்கணியுங்கள். எனக்கு  சிஎன்என்  இருக்கிறது. எனக்காக  அவர்கள்  நீண்ட காலம்  காத்திருக்கிறார்கள்”, என்றாரவர்.

ஆனால், ஒரு  வழக்குரைஞரான  அபு  பக்கார்  இப்போது  புது  ஊக்கம்  பெற்றிருக்கிறார்.  நேற்றிரவு  அவரது  செராமாவுக்கு  சீன  வாக்காளர்கள்  திரண்டு  வந்திருந்தது  அவருக்குத்  தெம்பைக்  கொடுத்துள்ளது.