புக்கிட் குளுகோரில் மசீச செய்ததுபோல் விலகிச் செல்லாமல் தெலோக் இந்தானில் போட்டியிட முன்வந்துள்ள கெராக்கானையும் அதன் தலைவர் மா சியு கியோங்கையும் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் பாராட்டினார்.
“பொறுப்பிலிருந்து விலகி ஒடாத, பழம்பெரும் கூட்டணியைக் கேவலப்படுத்தாத கெராக்கானுக்கு சபாஷ்”என்றவர் பாராட்டினார்.
“மா, உங்கள் துணிச்சலுக்கு வீர வணக்கம். அதுதான் உண்மையான ஆண்பிள்ளைக்கு அடையாளம். மசீசபோல் பின்வாங்கவில்லை, உங்கள் ஆதரவாளர்களையும் கைவிடவில்லை”,என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சின் முன்னாள் தலைமைச் செய்தியாசிரியர் தம் வலைப்பதிவில் கூறினார்.
இவர் பேச்சை கேட்டு தேர்தலில் நின்று, க்ராகனின் திரு.மா முகத்தில்
கரியை பூசிக்கொள்ளாமல் இருந்தால் நல்லது. வாக்காளர்களே பல குட்டைகுழப்பிகள்
வருவார்கள் பிரச்சாரத்துக்கு ! கவனமாக வாக்களியுங்கள் !
,
இரண்டு முறைகள் தோல்வியுற்றும், மீண்டும் மூன்றாம் முறையாக களத்தில் குதிக்கும் மா.சியு கியோங்கை சாதாரணமாக எடைப்போட்டு விடாதீர்கள். 2008 பொதுத்தேர்தலில் தெலுக் இந்தானில் DAP வெற்றிப்பெற்றது ஹிண்ட்ராப் பினால் என்பது சிறுப் பிள்ளையும் அறியும். 2013ல் வெற்றிப்பெற்றதுக்கு காரணமே ஒட்டு மொத்த சீன ஜனமும் DAP க்கு ஆதரவு தந்ததால். இப்போதைய நிலைமை வேறு. கவனம்.
மா.சியு கியோங் குடும்பம் தெலுக் இந்தானில் பரம்பரை பணக்காரர். பணம் பத்தும் செய்யும்.
கொடுக்கும் பணத்தையும் அன்பளிப்பையும் வாங்கி கொள்ளுங்கள் .உங்களால் இந்த இன வெறி பிடித்த பாரிசன் கட்சிக்கு நல்ல பாடம் படியுங்கள் . இல்லையெற்றல் வெற்றி கிடைத்த பிறகு சீனர்களும் இந்தியர்களும் வந்தேறிகள் என்ற பட்டம் கொடுப்பார்கள். மாட்டு தலையை கொண்டு வந்து ஆர்பாட்டம் செய்வார்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி அடைன்தாலும் பல்கலைகழகத்தில் இடம் கொடுக்க மாட்டார்கள் .ஆகவே தயவு செய்து உங்கள் ஆதரிவை டி ஏ பிஇக்கு கொடுங்கள் .
காடிர் தெலுக் இந்தான் மக்க உனக்கு உனக்கு … மாலை ரெடி வாரும்
கெராகானுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் அம்னோவுக்கு போடும் ஒரு ஓட்டுக்கு சமம்….சிந்தித்து செயல்படுங்கள் வாக்காளர்களே!!!!