சட்டவிரோத பேரணி குற்றச்சாட்டிலிருந்து 42 பேர் விடுதலை

photo2008-இல், சட்டவிரோதமாகக்  கூட்டம்  கூடியதாகவும்  விலைவாசி  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  போலீசாரை  அவர்களின்  கடமையைச்  செய்யவிடாமல் தடுத்ததாகவும்  குற்றம்சாட்டப்பட்டிருந்த 41  சமூக  ஆர்வலர்களும்  செய்தியாளர்களும்   இன்று  விடுவிக்கப்பட்டனர்.

அரசுத்தரப்பு,  அவர்கள்மீதான  குற்றச்சாட்டை  நிரூபிக்கத்  தவறிவிட்டதாக  செஷன்ஸ் நீதிமன்ற  நீதிபதி  மாட்  கனி   அப்துல்லா  கூறினார்.

விடுவீக்கப்பட்டவர்களில்  பத்து  எம்பி  தியான்  சுவா,  மலேசியாகினியின்  முன்னாள்  செய்தியாளர்  சைட்  ஜெய்மால்  ஜாஹிட்  ஆகியோரும்  உள்ளிட்டிருந்தனர்.