இணையத்தில் இப்ராகிம் அலியுடன் டியானா

dyanaதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  கணினிப்  போரும்  முழுவீச்சுடன்  தொடர்கிறது. இப்போது  டிஏபி  வேட்பாளர் டியானா  சோப்யா முகம்மட்  டாவுட்,  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியுடன்  காட்சியளிக்கும்  படமொன்று  இணையத்தில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.

அதில்  இப்ராகிம், டியானாவுக்கும்  அவரின்  தாயார்  யம்மி  சமத்துக்குமிடையில்  சிரித்த  முகத்துடன்  நிற்கிறார்.

அந்தப்  படத்தைப்  பார்ப்பவர்கள்,  டிஏபி-யால்  வெறுத்தொதுக்கப்படும்  இப்ராகிம்  அலியுடன்  டியானாவுக்கு  என்ன  தொடர்பு  என்று  கேள்வி  எழுப்புகிறார்கள். சிலர் இப்ராகிம்  அலி  அவரின்  குடும்ப  நண்பர்  என்கிறார்கள்.

அது,  கடந்த  வாரம்  அம்னோவின்  மூத்த  உறுப்பினர்  தெங்கு  ரசாலி  ஹம்சாவைச்  சிறப்பிக்கும்  ஒரு  விருந்தில்  பிடிக்கப்பட்ட  படம்  எனத்  தெரிகிறது.