இப்ராகிம்: டியானாவுக்கு சீனர் வாக்குகள் கிடைப்பதைத் தடுக்க என்னைப் பயன்படுத்துங்கள்

ibrபெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி,  தாம்  டிஏபி  வேட்பாளர் டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்டுடன்  இருப்பதைக்  காண்பிக்கும்  படத்தை  கெராக்கான்  அதன்  தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்குப் பயன்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என்கிறார்.

காஜாங்  இடைத்  தேர்தலின்போது  பிகேஆரும்  டிஏபியும்  மசீச வேட்பாளர்  பெர்காசா  தலைவர்களுடன்  இருப்பதைக்   காண்பிக்கும்  படங்களை  வலம்வரச்  செய்ததை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“சீன வாக்காளர்களைத்  துண்டிவிட்டு  அவர்களை  பிஎன்மீதும்  மசீசமீதும்  ஆத்திரம்  கொள்ள வைப்பதே  அதன்  நோக்கமாகும்.
“அதேபோலத்தான்  நான்  டியானாவுடனும்  அவரின்  தாயாருடனும்  இருக்கும்  இந்தப்  படத்தையும்  பயன்படுத்திக்  கொள்ள  வேண்டும்.

“சீன  வாக்காளர்கள்  சினமுறுவார்கள்  டிஏபி  வேட்பாளருக்கு  வாக்களிக்க  மாட்டார்கள்”,  என்று  மலேசியாகினிக்கு  அனுப்பிவைத்த  குறுஞ்செய்தியில்  இப்ராகிம்  கூறினார்.