தேர்தலில் தோற்றாலும் செனட்டர் பதவி கொடுத்து அமைச்சர் ஆக்கப்படலாம் என்று தம்மைப் பற்றி டிஏபி கூறி இருப்பதை தெலோக் இந்தான் பிஎன் வேட்பாளர் மா சியும் கியோங் மறுக்கிறார்.
“தோற்றுப்போனால் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்?”, என மா இன்று காலை மார்க்கெட்டை வலம் வந்தபோது வினவினார்.
நேற்று ஒரு செராமாவில் பேசியபோது டிஏபி தலைவர்கள் பலர், மா-வுக்குக் கவலை இல்லை. தோற்றாலும் “கொல்லைப்புற வழியாக” செனட்டர் ஆக்கப்பட்டு அமைச்சர் ஆகிவிடுவார் என்று கூறி இருந்தனர்
தோற்றுப்போனால் கொல்லைபுற வழியாக செனட்டர் ஆகலாம் என்று தானே எங்கள் ம.இ.கா.வினர் நினைக்கின்றனர்! இல்லாவிட்டால் ஏதாவது ‘மந்தி’ களுக்கு உதவியாளர்! ஏதோ ஒரு பதவி கிடைக்குமே!