சிஎம்-மின் கார்முன் குதித்த வேட்பாளர்

abu bakarபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கைச்  சந்திக்க  முயன்று  முடியாமல்  போனதால்  வெறுப்படைந்த  புக்கிட்  குளுகோர்  சுயேச்சை  வேட்பாளர்  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸன்,  முடிவில் முதலமைச்சர்  மாநிலச்  சட்டமன்றத்திலிருந்து  புறப்பட்டுச்  செல்லும்போது  அவரின்  காரின்  முன்  குதித்து  அதனுடன்   மோதிக்  கொண்டார்.

பின்னர், காரின்முன்  படுத்துக்கொண்டு  நகர  மறுத்தார். ஆனால்,  லிம்  அவரைச்  சந்திக்காமலேயே  சென்று  விட்டார்.

அபு  பக்கார் வலப்  பக்க விலா  எலும்பு  வலிப்பதாக  சொன்னதால் அவர்  அம்புலன்ஸில்  மருத்துவமனைக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.

கடந்த  வாரத்திலிருந்து முதலமைச்சரைச்  சந்திக்க  முயல்வதாகவும்  ஆனால்  முடியவில்லை  என்றும்  அபு  பக்கார்  கூறினார்.

“நான்  ஒரு  வேட்பாளர். இருந்தும்  முதலமைச்சரைச்  சந்திப்பதற்கு  ஏன் சிரமப்பட  வேண்டியிருக்கிறது?”,  என்று அபு  பக்கார்  காரின்முன்  குதிக்குமுன்  கூறினார்.