ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றத்தில் புகுந்து அட்டகாசம் செய்தனர்

protest 1சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என்.  ராயருக்கு  எதிராக  பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்துக்கு  வெளியில் ஆர்ப்பாட்டம்  செய்தவர்களில்  சுமார்  10 பேர், அந்த  ஸ்ரீடெலிமா   சட்டமன்ற  உறுப்பினரைத்  தேடி  சட்டமன்றக்  கட்டிடத்துக்குள்ளேயே  நுழைந்தனர்.

ஒருவர்  சட்டமன்றத்  தலைவர்  லவ்  சூ  கியாங்கின்  மேசைமீது  ஏறி  நின்று  ராயரைத்  தேடினார்.

“ராயரின்  இடம் எது?”, என்றவர்கள்  கூச்சலிட்டனர்.

அவர்களைப்  பின்தொடர்ந்து  செய்தியாளர்களும் உள்ளே  செல்ல  முயன்றனர். ஆனால்,  போலீசார்  அனுமதிக்கவில்லை.