பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன், இனி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க மாட்டார். உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நீண்ட காலம் ஆவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் ஜூன் 9-இல் தொடங்கும். எம்பிகள் மே 19-க்குள் கேள்விகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், கேள்விகளுக்குப் பதில் கிடைக்க ஒரு மாதத்துக்குமேல் ஆகிறது.
“இதனால் நாங்கள் நடப்பு விவகாரங்கள் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாமல் போய்விடுகிறது. கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்போது அவை காலம்கடந்தவையாக, அர்த்தமற்றவையாக ஆகி விடு விடுகின்றன”,என்று சுரேந்திரன் கூறினார்.
ஆமாம் கேள்வி கேட்டாதான் பிஎன் காரனுங்க காட்டு கூச்சல் போடுறானுங்க உங்க தொகுதியில மக்களுக்கு நல்லதை செயுறதைப் பாருங்க சார்…!
செவிடன் காதில் ஊதிய சங்கு . நானே ராஜா நானே மந்திரி . நாவடக்கம் தேவை . காலம் கடந்து செயல்படுவது எங்களின் நீண்ட நாள் கனவு .
உள்ளே சொல்ல வேண்டியதை, வெளியே சொன்னால் நாங்கள் என்ன செய்ய?. அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
போப்பா. போயி கொடுத்த வேலையைப் பாரு.
முதலில் உங்கள் தொகுதி மக்கள் உரிமைக்காக போராடுங்கள் .
பல ஆண்டுகளுக்கு பிறகு இப்பதான் சுரேந்திரன் சுயமா சிந்திக்க தொடங்கி உள்ளார் …கேள்வி கேட்டும் பதில் சொல்லியும் நாட்டில் ஒரு பருப்பும் வேகாது தம்பி. PKR தேர்தல படாங் செராய் சாபாங் பக்கம் போகாத ஒரே நாடலாமன்ற காக்கியும் நீங்கதான்…சபாஷ் ! இதுவும் வேண்டும் ?? இது எப்படி இருக்கு ?
பாடாங் செராய் தொகுதி மக்களை கொஞ்சம் வந்து பாருங்க சார்.
படாங் செராய் மக்கள் உங்கள் மேல் நம்ம்பிக்கை வைத்து தான் உங்களுக்கு ஓட்டு போட்டோம் இன்னும் பிரச்சனைகள் தீர வில்லை ,இன்னும் பாடங் சிராயில் 24 மணி நேரம் பொது மருத்துவ மனை வசதி இல்லை , ஆம்புலன்ஸ் வசதி இல்லை .எப்போ வரும் காத்திருப்போம்……… …………………….. இது ஒரு படாங் சிராய் மக்களின் எதிர்பார்ப்பு .
லூனஸ் பய பேசர் பக்கம் கொஞ்சம் வந்து பாருங்க சார்.இங்கு நடக்கம்
சமுதாயம் பிரசனை யும் கவனிக்க வேண்டும்