நஜிப் என்யுசிசி-யைப் பாராட்டுவது இஸ்லாமிய என்ஜிஓ-களை அவமதிப்பதாகும்

syedதேசிய  ஒருங்கிணைப்புக்காக  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம்(என்யுசிசி)  மேற்கொள்ளும்  முயற்சிகளைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பாராட்டிப்  பேசியது  பெர்காசாவுக்குப்  பிடிக்கவில்லை.

பிரதமரின்  பாராட்டு  இஸ்லாமிய, மலாய்  என்ஜிஓ-களைச்  சிறுமைப்படுத்துவதாகும்  என்று  பெர்காசா  தலைமைச்  செயலாளர்  சைட்  ஹசான்  சைட்  அலி  குறிப்பிட்டார்.

என்யுசிசி-இல்  மலாய்,  முஸ்லிம்  பிரதிநிதிகளின்  எண்ணிக்கை   குறைவாக  இருப்பதால் மலாய்  இஸ்லாமிய  என்ஜிஓ-கள்  அதை  ஏற்கனவே நிராகரித்து  இருப்பதாக    சைட்  ஹசான்  கூறினார்.

“தேசிய  ஒற்றுமை பற்றி  சிந்திக்க  வேண்டிய  என்யுசிசி, மலாய்,  முஸ்லிம்  என்ஜிஓ-களின்  மனம்  புண்படும்  வகையில்  பல  தடவை  அறிக்கைகளை  வெளியிட்டிருக்கும்போது  பிரதமர்  எப்படி  அதைப்  பாராட்டலாம்?”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.