ஆர்ப்பாட்டக்காரர்களைச் சீண்டிவிட முயன்றவர் கைது

umnoபினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்தில்  இன்று  மீண்டும்  அம்னோ  இளைஞர்கள்  ஆர்ப்பாட்டம்  செய்தனர். அப்போது  ஆர்ப்பாட்டக்காரர்களின்  ஆத்திரத்தைத்  தூண்டிவிட  முயன்ற  ஒரு  ஆடவரை  போலீசார்  கைது  செய்தனர்.

“அம்னோ  செலாகா”  என்று  கூறிய  ஸ்ரீடெலிமா டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என். ராயர்  அதற்காக  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன்  அம்னோ  இளைஞர்கள்  சட்டமன்றத்தின்முன்  கூடி  இருந்தனர்.

அப்போதுதான்  அவ்வாடவர்,  ஆர்ப்பாட்டக்காரர்களிடையே  நுழைந்து  அவர்கள்  சினமுறும்  வகையில்  நடந்துகொண்டார்  என  அம்னோ  இளைஞர்  செயலவை  உறுப்பினர்  அர்மண்ட்  அஜா  அபு  ஹனிபா  கூறினார்.

“அவர்  எங்கள் ஆத்திரத்தைத்  தூண்டிவிட  முயன்றார்  ஆனால்,  நாங்கள்  போலீசுடன்  ஒத்துழைத்தோம்”, என்றாரவர். அதற்குமேல்  அவர்  விவரிக்கவில்லை.