ஒரு மாநிலப் போலீஸ் தலைவரின் 30-வயது மகனுக்கு வேலை இல்லை. ஆனால், செல்வச் செழிப்பில் மிதக்கிறார் என்று கூறுகிறார் குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பான மைவாட்சின் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன்.
வேலையில்லாதிருக்கும் அந்த ஆடவர், கடந்த ஆண்டில் இரண்டு ஆடம்பர கார்களை வாங்கினாராம். ஒன்று ஜாகுவார், இன்னொன்று Audi A5. அவற்றின் மொத்த மதிப்பு ரிம1.1மில்லியன்.
அவரின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் ரிம500,000 அளவுக்குப் பணப் பற்றுவரவு நிகழ்ந்துள்ளது என்று சஞ்சீவன் கூறினார்.
மைவாட்ச் அமைப்புக்குப் பெயர்குறிப்பிடப்படாத ஒரு வட்டாரத்திலிருந்து இந்த இரகசிய தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார்.
வாழ்க லஞ்சம் ..வளர்க லஞ்சம் ….இதுதாண்ட மலேசியா !!!!!!! இது ஒரு முன்மாதிரி ..,இதுபோன்று இன்னும் எத்தனை பேரோ !!!! வாழ்ந்து கொண்டு பணத்தில் மிதக்குகிறார்கள்…….
மகனுக்குத் தானே வேலை இல்லை. அப்பனுக்கு வேலை இருந்தால் அப்பன் பணத்தில் மகன் கார் வாங்கலாம் தானே!
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை .லீ குவான் இயு போன்ற தலைவர்களால் தான் ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும். சிங்கபூரிலும் ஊழல் இருக்கும் ஆனாலும் அப்பட்டமாக இல்லை மலேசியாவைப்போல் – இதை சொன்னால் நாமெல்லாம் இந் நாட்டு எதிரிகளாக கருதப்படுவோம். தலையே அப்படி என்றால் வால் எப்படி இருக்கும்?
இந்நாட்டில் காவல் துறையில் பணிப்புரியும் உயர் அதிகாரியில் இருந்து கீழ்மட்டதில் பணிபுரியும் அனைவருமே உத்தமர்கள் . நேர்மை என்ற வார்த்தைக்கு மறு பெயர் மலேசியா காவல் துறையினரே .
இந்த நாட்டில் காவல் துறை சம்பளதுடன் கிம்பளம் மும் வாங்கிக்கொண்டுதான் இருகின்றது இதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது ஊழல்லே உழல்பவருக்கு இவைகள் நியாயம் !!!!!!!!!!!!!!!11
காவல்துறை நேர்மையாக செயல்பட்டால் நாடு செம்மையாக இருக்கும். நடக்குமா!
ஒரு சக நம்பரின் உண்மை கதை.இரவு வேலை முடித்து காலையில் motorcycle ரோடி canai வங்கி வரும் போகு போலிஸ் மடிக்கி என் தலைகவசம் போடவில்லை ஆகயால் உன்னை சமன் செய்ய வேண்டும்.நண்பர் இரண்டு ரோடி canai வந்கியடல் கையில் காசு இல்லை .போலிஸ் பரவில்லை நான் உன் ரோடி canai வங்கி செண்டிறனர் .