சாபா போலீஸ் தலைவர், ஹம்சா தயிப், தம் மகனைப் பற்றி மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் கூறுவதெல்லாம் வெறும் அபாண்டம் எனவும் அதன்வழி அவர் மலிவு விளம்பரம் தேடிக்கொள்ளப்பார்க்கிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் கூறுவதுபோல் தம் மகன் முகம்மட் அஷான்,30, வேலை இல்லாதவர் அல்லர் என்றும் பல ஆண்டுகளாகவே அவர் தொழில் செய்து வருவதாகவும் ஹம்சா தெரிவித்தார்.
சஞ்சீவன், இன்று காலை, அஷான் இரண்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதாகவும் அவற்றின் மதிப்பு ரிம1மில்லியன் மேல் என்றும் கூறி இருந்தார்.
தொழிலில் பல தொழில்கள் இருக்கின்றன. கஞ்சா தொழிலா? கடத்தல் தொழிலா?
சஞ்சீவன், போதுமடா உன் செயல், உன் வேலை, நீ உண்டு என்று இரு. யாரும் உனக்கு ஆதரவு தரப் போவதில்லை. உன் குடும்பத்தை நினைத்துப் பார்! அவர்களுக்காக வாழு!
மலேசியர்கள் எல்லாம் மடையர்கள் என்று நினைத்து விட்டான் இந்த போலீஸ்காரன்
மக்கள் சேவகன் என்ற போர்வையில் லஞ்சத்துக்கு முதலிடம் வகிக்கும் இலக்கா எது என்று கேட்டால் பைத்தியக்காரனும் சரியான பதில் சொல்லுவான்.