டிஎபி தலைமையகத்தை தீயிட்டுக் கொளுத்தப் போவதாக அம்னோ இளைஞர்கள் மருட்டல்

 

UMNO Youth-DAP HQகோலாலம்பூரில் டிஎபி தலைமையகத்தின் முன் சுமார் 50 கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அக்கட்டடத்தை தீயிட்டுக் கொளுத்தப் போவதாக மருட்டல் விடுத்தனர்.

ஆனால், அவர்களை அங்கிருந்த இலகு தாக்குதல் படை மற்றும் போலீஸ் படை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் டிஎபியின் ரோக்கெட் சின்னத்தை தாங்கி நிற்கும் விளம்பர தட்டையை உடைத்தெறிவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தனர்.

அந்த அம்னோ ஆர்ப்பாட்டக்காரர்கள் டிஎபி பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு எதிரான பதாகைகளைக் கொண்டு வந்திருந்தனர். அவற்றில் ராயரை “அனாக் ஹராம்” மற்றும் “இடியட்” என்ற வாசகங்கள் காணப்பட்டன.

ராயர் கடந்த செவ்வாய்கிழமை பினாங்கு சட்டமன்றத்தில் அம்னோவை “செலாக்கா” என்று கூறியிருந்தார்.

 

 

TAGS: