2012-இல் உலக மிதவாதிகள் இயக்கத்தை (Global Movement of Moderates) தோற்றுவித்தவர் மலேசிய பிரதமர் நஜிப் அவர்கள். அவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதற்கான முக்கிய காரணம், 2010-இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் நஜிப் ஆற்றிய உரையாகும்.
அதில், “உண்மையான பிளவு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களும் இடையிலோ அல்லது வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலோ அல்ல. அது மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேதான் உள்ளது.” என்று அவர் முழங்கினார்.
இந்த மிதவாதிகள் இயக்கம் ஹுடுட் சார்பாக ஒரு வட்டமேசை மாநாட்டை இன்று கோலாலம்பூரில் நடத்தினர். பல சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சுவராம் தலைவர் கா. ஆறுமுகம் அவர்கள் விவரித்த நடப்பின் மைய கருத்துக்கள் வருமாறு.
நிகழ்வுக்கு தலைமையேற்ற பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப், “ஹுடுட்டின் அமுலாக்கம் இனங்களுக்கிடையிலான உறவை அழித்துவிடும், அதை மலேசியர்கள் இதுவரை புரிந்துகொள்ளாத ஒன்றாக உள்ளது. கிளந்தான் இதை அமுலாக்கம் செய்ய முனைவதில் எதிர்ப்பை சந்திக்கும்” என்றார்.
இதில் உரையாற்றிய யாயாசான் சத்து மலேசியா தலைவர் முனைவர் சந்திர முசபார், ஹுடுட் கிளந்தானில் அமுலாக்க அனுமதிக்கப்பட்டால் பிறகு எல்லா மாநிலங்களுக்கும் பரவும் என்றார். ஹுடுட் இஸ்லாத்தின் மையம் அல்ல என்று வாதிட்ட அவர் ஹுடுட் இஸ்லாத்தின் அழகை பிரதிபலிக்கவில்லையென்றார்.
அடுத்து பேசிய மாராவின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் சாட் சலீம் பருக்கி, ஹுடுட்டின் அமுலாக்கம் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று கூறினாலும் அது அனைவரையும் பாதிக்கும் என்றார். “எது முக்கியம் குற்றமா, தண்டனையா” என வினவிய அவர் நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்கள் போதுமானவை என்றும் தேவையென்றால் அவற்றுக்கான மாற்றங்களை செய்யலாம் என்றவர், “ஆனால் நாடாளுமன்றத்திற்கும் ஓர் எல்லை உண்டு, எதையும் சட்டமாக்க இயலாது” என்றார்.
மூன்றாவதாக பேசிய மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்லைவர் கிருஸ்டபர் லியோங், ஹுடுட்டை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே என்பதை ஏற்றால் ஏமாறுவோம், ஹுடுட் அனைவரையும் பாதிக்கும் என்றார். மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை ஏற்றுக்கொண்டுதான் இஸ்லாம் என்பது கூட்டரசின் சமயமாக ஏற்றுக்கொள்ள பட்டது, இதற்கான தகவல் 27.9.1956-இல் பதிவு செய்யப்பட்ட ரீட் கமிசன் அறிக்கையில் உள்ளது என்றார். ஹுடுட் அரசமைப்புக்கு எதிரானது என வாதிட்ட அவர், அதில் உள்ள சிக்கல்கள் பல என்றார்.
மேலும் ஹுடுட் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், உதாரணமாக கைகளையும் கால்களையும் இழந்தவர்கள், சமூகத்தின் சுமையாகவே மாறுவார்கள் என்றார். மேலும், “லஞ்சம், ஊழல் மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மீது வழக்கு போடும் சாத்தியங்கள் கொண்ட நிலையும், முழுமையான உத்தரவாதம் கொண்ட நீதியை தராத சூழலில் ஹுடுட் எப்படி நீதியை உறுதி செய்யும்” என வினவினார்.
உலக மிதவாதிகள் இயக்கத்தின் இயக்குனர் சைபுடின் அப்துல்லா இந்த வட்டமேசை மாநாட்டை வழி நடத்தினார். இவர் முன்னாள் உயர் கல்வி அமைச்சின் துணை அமைச்சராகவும் அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
ஹுடுட் சட்டத்தை கிளந்தான் மாநில அரசாங்கம் 28.10.1993-இல் ஏற்றுக்கொண்டது. அதைத்தொடர்ந்து திரெங்கானுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அமுலாக்கம் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் வேண்டும். இதைப்பற்றி கருத்துரைத்த வழக்கறிஞருமான ஆறுமுகம், “தேசிய முன்னணி ஹுடுட் சார்புடைய அரசமைப்பு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாது, அதே வேளையில் பாஸ் கட்சி இதற்காக அரசியல் போராட்டம் செய்வதையும் விரும்பும், அதற்கேற்றவாறு நாடகமும் ஆடும்” என்றார்.
பிரதமரா ? தான் பதவியில் இருக்கணும்னு இனவாதத்தை கண்டும் காணாதது போல உள்ளார்.
பதவியில் சாகும் வரை இருக்கவே எல்லா நாடகங்களும்–அதற்க்கு பிறகு அவனின் பிள்ளைகள் தொடர்வார்கள் — அரசியலிலும் வம்சாவழி மிக முக்கியமாக்கப்பட்டுள்ளது – எல்லாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிடத்தான்.
ஆட்டம் கண்ட அரசாங்கம் ஆட்சியில் தொடர்ந்து நிலைக்க நடத்தும் நாடகமே இது. மக்களிடம் குழப்பத்தை உண்டு… ஆட்சியை தொடரலாம் என்பதே அவர்களின் கனவு…..!!!!
ஹுடுட் அமலாக்கத்தைக் கண்டு அஞ்ச வேண்டியவர்கள் குற்றவாளிகள்தான்….. ஆனாலும் பல சமயத்தைப் பின்பற்றும் குடிமக்கள் வாழும் மலேசியா போன்ற நாட்டுக்கு இது தேவைதானா? நடைமுறையில் இருக்கும் சிவில் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்தினாலே போதுமானது. ……ஒரு கால் அவர்களது பிடிவாதம் இ……..கு பின்னடைவை கொண்டுவருமோ!
வட்ட மேஜைக்குள் ஒரு மத நம்பிக்கை…மாற்றப்பட வேண்டும்..என்ன
கோமாளித்தனம்…