ஐந்தாண்டுகளுக்குமுன் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் மெழுகுதிரி அஞ்சலியில் ஈடுபட்ட 14 பேருக்கு உதவச் சென்ற ஐந்து வழக்குரைஞர்களை போலீசார் கைது செய்தது சட்டவிரோதமானது என கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அவர்களை இரவுமுழுவதும் பிடித்துவைத்ததும் வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதியளிக்க மறுத்ததும்கூட சட்டவிரோதமான செயல்களாகும் என நீதிபதி ஜோன் லூய்ஸ் ஓ ஹாரா தீர்ப்பில் குறிப்பிட்டார்.
5 வழக்குரைஞர்களுக்கும் மொத்தம் ரிம375,000 இழப்பீடு கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அளித்த தீர்ப்புடன் சட்ட விரோதமாக செயல்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கும் தகுந்த தண்டனையை கொடுத்திருக்க வேண்டும். அதுவே சிறந்த தீர்ப்பாக அமைந்திருக்கும்…..