அம்னோ இளைஞர்களின் நடவடிக்கைகள் பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கின் பலவீனத்தைத்தான் காண்பிக்கின்றன என்று டிஏபி கூறுகிறது.
இந்த வன்செயல்கள் அம்னோ அரசியலையும் நஜிப்பின் தலைமைத்துவத்தின் பலவீனத்தையும் காண்பிக்கின்றன என டிஏபி தேசிய சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
நேற்று நடந்தது பற்றி நஜிப்பின் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
“அம்னோ தலைவர் என்ற முறையில் நடந்தவற்றுக்கு அவரே பொறுப்பே”, என்றாரவர்.
அம்னோ இளைஞர்கள் நேற்று டிஏபி தலைமையகத்தில் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தது பற்றியும் அக்கட்டிடத்தைக் கொளுத்தப்போவதாக மிரட்டியது பற்றியும் கருத்துரைத்தபோது அந்த பூச்சோங் எம்பி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் பலவீனமாக இருப்பதால் தானே இவர்கள் தங்கள் பலத்தைக் காட்டுகிறார்கள்!
காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?,சிங்கப்பல்லை பிடுங்கிய சிங்கமாகிவிட்டதா!!!
காவல்துறை காவல் ஞமலியாக மாறிவிட்டது.