மசீச இளைஞர் பகுதி, நேற்று டிஏபி தலைமையகத்தைத் தீவைத்துக் கொளுத்தப்போவதாக மிரட்டிய அம்னோ இளைஞர்களை அதன் தலைவர் கைரி ஜமாலுடின் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
“கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர்கள் டிஏபி தலைமையம் கொளுத்தப்படும் என மிரட்டி இருப்பதை மசீச இளைஞர் பகுதி கடுமையாக கண்டிக்கிறது. அது உடலுக்குச் சேதத்தையும் உயிருக்கு அபாயத்தையும் உண்டுபண்ணும் செயலாகும்” என்று மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்..
மசீசவும் டிஏபியும் அரசியலில் எதிரிகள் என்றாலும், “ஜனநாயகத்தையும் நிலைத்தன்மையையும் காப்பதே முதல் வேலை” என்றும் அவர் சொன்னார்.
அம்னோ தலைவர்களே “செய்தது சரி தான்!” என்கின்றனர். சேதமும் அபாயமும் அவர்களுக்குத் தெரியாதா!
நடக்கட்டும் எல்லாம் துண்டி விட்டு நடக்கிற காரியம்தான். இந்த அசிங்கமெல்லாம் அவர்களையே போய் சேரும்.
நம் நாட்டில் என்னதான் நடக்கிறது. ஆவேசம்தான் தீர்வா !
நமக்கு பட்டது ஞாயம்…மத்தவங்களுக்கு அநியாயம்…புத்தன்! ஏசு! காந்தி!
பூமியில் பிறந்தது எதற்காக…?பதில் தேட வேண்டிய வரிகள்…