அம்பிகா: ரேலா-வுக்கு ஜாஹிட்டின் எச்சரிக்கை தேர்தல் சட்டத்தை மீறுகிறது

ambikaதெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  தொடர்பில்   ரேலா  படையினரிடையே    உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   பேசிய  பேச்சில்  பல   தேர்தல்  சட்ட மீறல்கள்  நிகழ்ந்திருப்பதாக  முன்னாள்  பெர்சே  இணைத் தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்   குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின்  வாக்குகள்  பற்றி  அவருக்கு (ஜாஹிட்) எப்படித்  தெரியும்?  வாக்குகள்  இரகசியமானவை  அன்றோ? பல  தவறுகள் நிகழ்திருப்பதாக  என்னால்  சொல்ல  முடியும்.  ஆனால், இசி(தேர்தல்  ஆணையம்)  நடவடிக்கை எடுக்குமா?”, என்று  அம்பிகா வினவினார்.

நேற்று, பள்ளிக்கூடம்  ஒன்றில்  நடந்த  பொதுக்கூட்டத்தில் பேசிய  ஜாஹிட்,  கடந்த  தேர்தலில் “வாக்களித்தது  யார்,  வாக்களிக்காதது  யார்  என்பதை  நான்  அறிவேன்” என்றுரைத்து, இப்போதைய  தேர்தலில்   பிஎன்  வெற்றி  பெறுவதை  ரேலா  படையினர்  உறுதிப்படுத்த  வேண்டும்  என்று  கண்டிப்பாகக்  கூறி  இருந்தார்.