புக்கிட் குளுகோரில் இன்று வாக்களிப்பு. அங்கு பிஎன் போட்டியிடவில்லை என்பதால் தேர்தல் பரப்புரை மிக அடக்கமாகவே நடந்தது.
இந்த இடைத் தேர்தலில் டிஏபி-இன் ராம்கர்பாலை எதிர்த்து பார்டி சிந்தா மலேசியா-வின் ஹுவான் செங் குவானும் சுயேச்சை வேட்பாளர்களான அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸானும் முகம்மட் நபி பக்ஸ் முகம்மட் நபி சத்தாரும் போட்டியிடுகின்றனர். அபு பக்கார் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால், வாக்குச் சீட்டில் அவர் பெயர் இன்னும் உள்ளது.
ராம்கர்பால் சிங்தான் வெல்வார் என்பதே பொதுவான கருத்தாகும். எவ்வளவு பெரும்பான்மையில் என்பதே இப்போதைய கேள்வியாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் அவரின் தந்தை காலஞ்சென்ற கர்பால் சிங் 41,778 வாக்குகள் பெரும்பான்மையில் அங்கு வெற்றி பெற்றார்.
82,283 வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் 78 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்பது தேர்தல் ஆணையத்தின் (இசி) ஆருடம்.