மணி இரவு 7.30:.புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிஎபியின் வேட்பாளர் ராம்கர்பால் 14,816 வாக்குகளைப் பெற்று முன்நிலையில் இருக்கிறார்.
இரவு மணி 7.00 நிலவரம்: ராம்கர்பால் வெற்றி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இக்கட்டத்தில் ராம் 12,375 வாக்குகளை பெற்றுள்ளார். பார்ட்டி சிந்தா மலேசியாவின் வேட்பாளர் ஹுவான் செங் ஹுவான் 1,525 வாக்குகளையும் சுயேட்சைகளான முகமட் நபி பக்ஸ் 462 மற்றும் அபு பாக்கார் 133 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் தங்களுடைய வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.
முன்னமே முடிவான வெற்றிதான். ஒவ்வொரு ஜ.செ.க. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் களம் இறங்கி சேவை செய்தீர்கலானால்தான் அடுத்த பொது தேர்தலில் மக்களிடையே முகத்தைக் காட்ட முடியும். இல்லையேல், மேலாவாத்தி சட்டமன்ற தொகுதியில் முறையாக சேவை செய்யாது மக்களின் அதிருப்பதியை எதிர்கொள்ள முடியாமல் போர்ட் கிள்ளானுக்கு ஓடிப் போன மந்திரி பெசாரின் நிலைதான் மற்றவர்களுக்கும் வரும். இது சிலாங்கூரிலும், பினாங்கிலும் இருக்கும் மக்கள் கூட்டணியினருக்கு செவியில் உரைக்க வேண்டும். Shiok Sendiri’ என்ற நோக்கத்தில் வெற்றுப் பேச்சினால் மட்டும் ஒட்டு வராது. பணத்தை தன் வயிற்றில் கட்டிக் கொண்டு மக்கள் வயிற்றில் அடித்தாலும் ஒட்டு வராது. இவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இந்தியர்களுக்கு கொஞ்சம் தானம் செய்யும் அற வழியையும் பின்பற்ற வேண்டும்.
வெற்றிகளாலும் வீண் பெருமைகளாலும் வருவதில்ல பெருமை. விவேகமுடன் ஆற்றும் நல்வினைகளால் பெருமைகளை நிலைநாட்டவேண்டும். மதிப்புமிகு கர்ப்பால் அவர்களின் இளவல் ராம் கோபால் அவர்கள், உங்கள் சேவைக்கும் ஆற்ற்லுக்கும் வழிஅமைத்த்க்கொடுத்த மானில அரசுக்கும் நன்றிக்கடன் பட்டவராய் இயங்க்வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிநோக்கும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு விடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கு மட்டுமே PN அமைத்துக்கொண்டிருக்கும் ஒருவழிப்பாதையைப்போல் அல்லாது இருவழிப்பாதையாக இருக்கட்டும்