பிசிஎம் ஹுவானுக்கு தோல்வியிலும் ஒரு ஆறுதல்

huanபிசிஎம்  உதவித்  தலைவர்  ஹுவான்  செங்  குவான், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் தோற்றது  பற்றிக்  கவலைப்படவில்லை. டிஏபி-இன்   பெரும்பான்மையைக்  குறைக்க  முடிந்ததை  எண்ணி  ஆறுதல்  கொள்கிறார்.

ஹுவான்   வைப்புத்தொகையை  இழந்தார்  என்றாலும்  தாம் 3,583 வாக்குகள்  பெற்றதைப்  பெரிதாக  நினைக்கிறார். அது 13வது  பொதுத்  தேர்தலில்  பத்து  கவானில்  கிடைத்த  வாக்குகள்போல்  கிட்டத்தட்ட  இரு  மடங்கு  ஆகும்  என்பதில்  அவருக்கு  ஒரு  திருப்தி.

“என்  ஆதரவாளர்கள் வருத்தமடையக்  கூடாது. இது  ஒரு சாதாரண  சண்டைதான்.  போரல்ல. தோற்றாலும்  டிஏபி-இன்  பெரும்பான்மை  என்னால்  குறைந்தது”,  என்று  ஹுவான் கூறினார்.