அம்னோவைக் குறைகூறுவது மலாய்க்காரரையும் இஸ்லாத்தையும் சிறுமைப்படுத்துவதாகும் என இன-வாத கூச்சல் போடுவதை அக்கட்சி நிறுத்த வேண்டும் என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
அம்னோ, தான் ஒரு கட்சி என்பதையும் மலாய் என்பது ஓர் இனம் என்பதையும் உணர வேண்டும். என்றாரவர். அம்னோவில் கிறிஸ்துவ உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மலாய்க்காரர்கள்-அல்லர் ஆனாலும் பூமிபுத்ராக்கள் என்பதை அவர் நினைவுறுத்தினார்.
“அம்னோ மலாய்க்காரர்களைப் பிரதிநிதிப்பது உண்மையே. ஆனால், சாபா, சரவாக்கில் கிறிஸ்துவ உறுப்பினர்களும் அத்ற்கு உண்டு.
“மலாய் என்பது இனம். அம்னோ என்பது கட்சி. அதனால் மலாய்க்காரர்தான் அம்னோ என்று நான் சொல்ல மாட்டேன்”, என்று அன்வார் கூறினார்.
அவர், நேற்றிரவு தெலோக் இந்தானில் பேராக் பிகேஆர் இளைஞர் நடவடிக்கை மையத்தில் 200 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசினார்.
இந்த வித்தியாசம் தெரிந்தால் அவர்கள் ஏன் இன்னும் அரசாங்கத்திடம் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இது கூட புரியாத umno கோமாளிகளுக்கு அவர்கள் தலைவர்களும் ஆதரவு கொடுப்பது இன்னும் வேடிக்கை .
சபாஸ் தலைவரே
இதைத்தான் சரவாக் மலாய்காரர் அல்லாதார் கேட்கும் கேள்வி ? UMNO என்ற கட்சியை தோற்றுவித்தவர்கள் வேண்டுமானால் மலாய் சமுதாயமாக இருக்கலாம் , இன்றைய சூழ்நிலையில் UMNO வில் பல தரப்பட்ட பூமி புத்ரா அந்தஸ்து கொண்ட சரவாக் பூர்வீக குடிகள் அந்த கட்சியில் உள்ளனனர் . பிறகு ஏன், உங்களுக்கு மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது ?? மற்றொண்டு , இஸ்லாம் மலாய்காரர்களுக்கு மட்டும் சொந்தமான பூர்வீக சொத்து அல்ல !! இஸ்லாம் ஒரு மார்க்கம் , மதம் . உலக மக்கள் யாருவேண்டுமானாலும் தங்களை இஸ்லாத்தில் மனம் ஒப்பி ஏற்றுக்கொள்ளலாம். அது உலக சொத்து . மலாய்காரர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதை முட்டாள்தனமாக பிதற்றவேண்டாம் என்பதையும் எடுத்து சொல்லுங்கள் !!