தெலோக் இந்தான் டிஏபி செராமாவில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்

intanநேற்றிரவு  தாமஸ்  கிண்ண  இறுதி  ஆட்டம்  நடைபெற்றாலும்கூட  தெலோக்  இந்தான்  டிஏபி  செராமாவுக்கு  ஐயாயிரம்  பேர்  திரண்டு  வந்திருந்தனர். பக்காத்தான்  ரக்யாட்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  முதலானோர்  அதில்  உரையாற்றினர்.

லிம், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தல்  வெற்றி  தெலோக்  இந்தானில்  தொடர  வேண்டும்,  அதற்கு டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்டை  ஆதரிக்க  வேண்டும்  எனக்   கூட்டத்தினரைக்  கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தினர், “Ubah, satu kali lagi, (மாற்றம். மீண்டும் ஒரு  முறை  மாற்றம் தேவை)  என்று  ஆதரவுக்  குரல்  கொடுத்தனர்.

அன்வார்  பேசியபோது   கெராக்கானைக்  கைவிடுங்கள்  என்றார். அது ஓர்  உதவாக்  கட்சி,  அதன்  உறுப்பினர்கள்  நாடாளுமன்றத்திலும்  அமைச்சரவையிலும்  வாய் திறக்க  மாட்டார்கள்  என்றார்.

“எனக்குத்  தெரியும். அமைச்சரவை  கூட்டங்களுக்குத்  தலைமை  தாங்கி  இருக்கிறேன். அம்னோ  இடைக்காலத்  தலைவர்  என்ன  கூறினாலும்  ‘ஆமாம்’  என்றுதான்  சொல்வார்கள்”, என்றவர்  குறிப்பிட்டார்.