தெலோக் இந்தான்: இடைத் தேர்தலுக்கான அவரது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பிஎன் வேட்பாளர் மா சியு கியோங், மற்றவற்றோடு அந்நகரின் பிரபல சாய்ந்த கோபுரத்தை யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாக அதில் வாக்குறுதி அளித்துள்ளார்.
தெலோக் இந்தானில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
மா,53, தெலோக் இந்தானில் பிறந்தவர். அவர், அதன் சட்டமன்ற உறுப்பினராக ஒரு தவணையும் எம்பி ஆக இரண்டு தவணையும் இருந்துள்ளார்.
இருக்கின்ற பல்கலைக்கழகங்களுக்கே அனுப்ப மாணவர்கள் போதவில்லை. அப்புறம் இன்னொரு பல்கலைகழகம் எதற்கு?. மாணவர் தேடி பல்கலைக்கழகங்கள் செய்யும் விளம்பரமே இதற்கு போதுமான ஆதாரம். எல்லா தே.மு. கட்சிகளும் பணம் பண்ண மேலும் ஒரு பல்கலைக்கழகமா?. ‘Aimst University’ – யின் மருத்துவ பிரிவில் இருந்த இந்திய நாட்டு சிறந்த பேராசியர்கள் விட்டுப் போன இடத்திற்கு வந்திருக்கும் ஆங்கிலத்தில் ததிகினதோம் போடும் மியான்மார் விரிவுரையாளர்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் தானைத் தலைவரின் கூஜாக்கள். ஆரம்பத்தில் ‘பொதுச் சேவை துறையின்’ உதவித்தொகை கொண்டு படிக்க வந்த மலாய்கார மாணவர்கள் கடந்த 3 வருடமாக இங்கே அனுப்பப் படுவதில்லை. காரணம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கெரக்கான் ஆரம்பித்த பல்கலைக்கழகம் வாழவும் பிடிக்காமல், சாகவும் பிடிக்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. எப்படியோ இந்நாட்டில் “பட்டதாரி” என்பது கீழே இருக்கும் கல்லை பொருக்கி எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டனர் அரசியல்வாதிகள். அதில் பத்தில் பதினொன்றாக இதுவும் ஒன்று.
ம உக்கு இப்போதாவது தேர்தல் அறிக்கை என்று புத்தி வந்துள்ளது கண்டு மகிழ்ச்சி, நான் தெலுக் இந்தான் பழைய ஆள். பல முறை DAP பதவி எடுத்து எல்லாம் கதை சொல்லி காலவதியாக்கி ஓடிப்போன கதைகள் தெரியும். கேரகானும் முன்பு அதைதான் செய்தது.
BN ம் ஒன்றும் சாதிக்கவில்லை. இப்போது BN ம் கேராக்கணும் வரிஞ்சி கட்டிக்கொண்டு வராங்க …DAP ம் பாகத்தான் பழைய பல்லவியில் அரசில் சூடேத்தி தமிழர்களை கெளவி மீண்டும் காவி உடையில் அரே ராமா அரே கிருஷ்ணா போட்டு விடலாம். இளைய தலைமுறை வேட்ட்பாளர் பேச்சி கேக்க அழகா இருக்கு .நாறிப்போன தெலுக் இந்தானை மேம்படுத்த குறைந்தது 2 பில்லியனாவது தேவை. தெலுக் இந்தான் கடலில் மூழ்கும் பயம் ஒரு பக்கம். மாநில பெரும் திட்டம் பத்தி
மாநில மந்தெரி புசார் ஒன்னுமே சொல்ல வில்லை .அவர்க்கு தேர்தலை பற்றி தெரியாதோ?
ம வின் கெரக்கான் கூட்டம் NB னுடன் சேர்த்து செய்தாலும் மக்கள் நலன் பெறுவார். DAP அரசியல் பேசலாம் /புத்தி சொல்லாம் /கோசம் எழுப்பலாம் .மக்கள் தேவை சாதனை என்பது மதிய ஆட்சி வரை கோசமே! மக்கள் வெறுப்பின் எல்லைக்கு போகலாம் அடுப்பின் பூனைக்கு தான் தெரியும் இனத்தின் பசி.
தேர்தல் சமையத்தில்தான் அதைச்செய்கிறேன்,இதைச்செய்கிறேன் என்று தம்பட்டம் அடிக்கும் வேட்ப்பாளர்கள் தேர்தலுக்குப்பின் மக்களை அணுகுவதில்லை.எல்லாம் வெளிவேசம்.தமிழன் இன்னும் கூஜா தூக்கியாகத்தான் இருக்கிறான்.
மா நீர் தேர்தல் அறிக்கை கொடுத்து என்ன கிழிக்க போறீர்..? உனது சமூகத்தையே காரி துப்புறான் ஜாகிட் அவன உன் தொகுதிக்கே வர விடாம தடுக்க உனக்கு தைரியும் இருக்கா..?