நஜிப்: சமத்துவமின்மை மலேசியாவின் மிகப் பெரிய சவால்

najibபொருளாதார  ஏற்றத்தாழ்வே  மலேசியாவை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  சவால்   என்பதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இன்று  நிதி  அமைச்சில்  பட்ஜெட்  ஆலோசனை  மன்றக்  கூட்டத்தில்  பேசிய  நஜிப்,  ஆசியானுடனும்  உலகின்  மற்ற பகுதிகளுடனும்  ஒருங்கிணைந்து  பணியாற்றுவது  மற்றொரு  பெரிய  சவாலாகும்  என்றார்.

“ஏற்றத்தாழ்வே மிகப்  பெரிய  சவாலாகும். நாம்  முன்னோக்கிச்  செல்லும்போது  நம்  பொருளாதாரம்  மேலும்  சமமான  அளவில்  பங்கிடப்படுவதைக்  காண  விரும்புகிறேன்”, என  நிதி  அமைச்சருமான  நஜிப்  கூறினார்.