ஸாஹிட்: டிஎபிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி கெட்டவர்கள்

 

Zahid Hamidi -Ingratesடிஎபிக்கு வாக்களிக்க விரும்பும் சீனர்கள், குறிப்பாக வாணிபத்தில் வெற்றி கண்டவர்கள், நன்றி கெட்டவர்கள் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார்.

ஏன் நன்றி கெட்டவர்கள் என்றால், அவர்கள் செல்வந்தர்களாவதற்கு பங்களிப்புச் செய்த மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் அவர்கள் கைவிட்டு விட்டனர்.

இந்தியர்கள் மீது அதிகமான பரிவு காட்டி பேசிய இந்த அமைச்சர் ஹமிடி, “தெலுக் இந்தான் மக்கள் மீண்டும் டிஎபியை தேர்வு செய்தால் நான் வருத்தப்படுவேன். மலாய்க்காரர்கள் வருத்தப்படுவர். இந்தியர்கள் இன்னும் அதிகமாக வருத்தப்படுவர்”, என்று கூறினார்.

“சீனர்களுக்கென்ன, அவர்கள் வணிகர்கள். ஆனால், மலாய்க்காரர்களும் இந்தியர்களும் அவர்களுடைய பொருள்களை வாங்காததின் வழி அவர்களை ஆதரிக்கவிட்டால் என்னவாகும். அவர்களும் பிழைக்க முடியாதல்லவா.

“ஆக, மலாய்க்காரர்களும் இந்தியர்களும் சீன வணிகர்களை ஆதரிக்கின்றனர்…வெற்றி பெற்ற அவர்கள் டிஎபிக்கு வாக்களிக்கின்றனர். அவர்கள் நன்றி கெட்டவர்கள், சரிதானே?”, என்று ஹமிடி அங்கிருந்தவர்களிடம் உணர்ச்சிக் குறிப்புடைய கேள்வியை எழுப்பினார்.

தெலுக் இந்தான், கம்போங் டுரியான் செபாதாங்கில் கூடியிருந்த சமூக தலைவர்கள் அவரின் கேள்விக்கு ஆதரவான பதிலை அளித்தனர்.

டிஎபிக்கு வாக்களிப்பதால், இந்த பணக்கார சீன வணிகர்கள் இப்போது உதவி தேவைப்படும் மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் புறக்கணிக்கின்றனர் என்றாரவர். ஆனால், இது குறித்து அவர் விபரம் எதுவும் அளிக்கவில்லை.

ஆனால், பாரிசான் நேசனல் ஒற்றுமை முன்மாதிரியின் கீழ் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து அனைவரின் நலன்களுக்காக நாட்டை மேம்படுத்துகின்றனர் என்றார் அந்த அமைச்சர்.

“இன்று, மலாய்க்காரர்களும், இந்தியர்களும், சீனர்களும் ஒன்றுபட்டு பிஎன் வேட்பாளர் மா சியு கியோங்கை தேர்வு செய்து வட பேராக் பகுதிய மேம்படுத்துவோம்…

“ஆம், நான் ஒரு மலாய்க்காரர்தான். ஆனால், மலாய்க்கார்களும், சீனர்களும், இந்தியர்களும் ஒரே மலேசியா என்ற பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றாரவர்.