தெலோக் இந்தான் இடைத் தேர்தல் வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டின் தாயார், தாம் பெர்காசாவில் இருப்பதற்கும் தம் மகள் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் சம்பந்தமில்லை என்று தம்மைக் குறைகூறுவோருக்குப் பதில் அளித்துள்ளார்.
“நான் அம்னோ உறுப்பினர். பெர்காசா உறுப்பினர். அதனால் யாருக்கு என்ன பிரச்னை?
“டியானாதான் போட்டியிடுகிறார். அவருக்குத்தான் வாக்களிக்கப்போகிறீர்கள், எனக்கல்லவே.
“வலைப்பதிவர்கள் என்னைச் சாடுகிறார்களா, சாடட்டும். புத்திசாலிகளுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும்”, என யம்மி சமத் கூறினார்.
டியானாவுக்கு பெர்காசாவைப் பிடிக்காது. அதனால் அவர் சேரவில்லை.
அவ்வமைப்பு அரசியலில் ஆர்வம்காட்டி அம்னோ சொல்படி நடக்கத் தொடங்கியதை அடுத்து தமக்கும் அதில் ஈடுபாடு குறைந்து போனதாக அவர் சொன்னார்.
நாங்கெல்லாம் புத்திசாலிகள்தான். அது எங்களுக்கும் தெரியும். உங்களுக்கும் புரியும். ஆனா, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாம இருந்தா சரி. LKS – க்கும் ஜ.செ.க. -க்கும் இது ஒரு நல்ல பாடம். பாம்பை பக்கத்தில் வைத்து பாலை வார்த்தால் அது என்றாவது ஒரு நாள் கடிக்க கூடும். துங்கு அசிஸ் விவகாரத்தில் பட்டும் திருந்தவில்லையானால் ஆதரவாளர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பேராக் ஜ.செ.க. கட்சியின் தலைவர்களுக்கிடையே இருக்கும் உட்பூசலை தவிர்க்க எண்ணி ங்கே -க்கு ஆதரவான சீனருக்கும் இடம் கொடுக்காமல், குலா-விற்கு ஆதரவான இந்தியர்க்கும் இடம் கொடுக்காமல், ஒரு மலாய்க்காரருக்கு கொடுத்ததால் வந்த வினை இது. முதலில் ஜ.செ.க. தம் கட்சியில் இருக்கும் உட்பூசலை தவிர்க்க உங்கள் தலைவர்களுக்கும் குட்டித் தலைவர்களுக்கும் ‘BIRO TATANEGARA’ – க்கு கொண்டு போய் கட்சிக்கு எப்படி விசுவாசமாக உழைக்கனும்ன்னு ஒரு சிறப்பு பயற்சி கொடுங்கள். அப்பொழுதாவது உங்கள் தலைவர்கள் திருந்துகின்றார்களா என்று பார்ப்போம். இன்னும் தலைக்கணம் கொண்டு திரிந்தால் அப்புறம் எதிர்க்கட்சி ஆதரவாளர்களை இழக்க நேரிடும். ஜாக்கிரதை.
யானைக்கு மதம் பிடித்தால் தன் மண்டையில் மண்ணை
வாரி போட்டு கொள்ளுமாம் நைனா
தேனீ அவர்களே BIRO TATA நெகரவில் பிற சமுதாயத்தையும் மற்ற இன மதத்தை ஒழிக்க பாடம் கற்று கொடுக்கிறார்கள் முடிந்தால் நீங்களும் மற்றும் பரிசனுக்கு அடிமையாக இருக்கும் அனைத்து இந்திய கட்சிகளும் அங்கே பாடம் படிக்க போங்க.
BIRO TATANEGARA என்று சொன்னது அதைப்போல உள்ள இடத்திற்கு கொண்டு சென்று ஜ.செ.க. தலைவருக்கு அறிவு புகட்டுங்கள் என்று சொன்னது.