உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “நன்றி கெட்டவர்கள்”என்று தெலோக் இந்தான் இந்திய வாக்காளர்களிடமும் சொல்லிவிடாமல் இருக்க வேண்டும் என மஇகா நினைவுறுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட பேச்சு இடைத் தேர்தலில் பிஎன் வாய்ப்புகளைக் குறைத்துவிடலாம் என மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
நேற்று தெலோக் இந்தானில் மலாய் கம்பம் ஒன்றில் பேசிய ஜாஹிட், டிஏபி-க்கு வாக்களிக்கும் சீனர்களை நன்றி கெட்டவர்கள் என்று குறிப்பிட்டது தவறு என்று சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் தெரிவித்தார்.
இப்படிப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார். .
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மாஇகா நன்றி கெட்டவர்கள்தான் .
அப்படி என்றால் வேறு யார்தான் நன்றி உள்ளவர்கள் . நீங்கள் கேட்டீர்களா .ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் அரசியல் இல்லை .
பரவாயில்லயே ம.இ.கா காரர்கள் மீசை நன்கு முருக்குகிரார்களே,
முன்பெல்லாம் அன்மோ காரன் பேசிவிட்டால் வாயே திறக்க
மாட்டார்கள்.
அட நிங்க வேற இந்த ஆளு அடுத்த தவணைக்கு மந்திரி இருக்குனும் என்று இப்போவே நாடகம் ஆரம்பித்துவிட்டார்
ஏதோ மானம் ரோசம் சூடு சொரணை எல்லாம் டாக்டருக்கு கொஞ்சம் வந்திருக்கு பரவாயில்லையே..?
சுப்பிரமணியம் சொன்னது: தேர்தல் நேரத்தில் இவ்வாறான விசயங்களை பேசாமல், தேர்தலில் தே.மு. மக்களுக்கு ஆற்ற வேண்டிய செய்திகளை மட்டும் பேசினால் போதுமானது என்றார். இப்ப இந்தியர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்லாதீர்கள். தேர்தல் முடிந்து சொன்னால் எங்களுக்கு கவலை இல்லை என்பதே. சொல்ல வந்ததை நேரே தலை நிமிர்ந்து சொல்ல தைரியமில்லாமல் தலையை சுற்றி வந்து சொல்வதேன். “யாமிருக்க பயம் ஏன்”? என்று சொல்ல வேண்டிய சுப்ரமணியம், “யாமிருந்தாலும் அபயம் இல்லை” என்று சொல்கின்றார்!.
அடுத்து பிளட்சர் தமிழ் பள்ளியை எமாற்றிய சரணணனும் மேலவதி தமிழ் பள்ளியை எமாற்றிய பழனி வேலும் அறிக்கை விடுவார்கள்.இந்த முவருக்கும் முருகனின் பெயர் .வெற்றி வேல் முருக தயவு செய்து இந்த துரோகிடம் இருந்து நமது சமுதயதையும் தெலுக் இந்தனியும் காப்பற்றிவிடு .
llஅம்னோ காரனிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்க திராணி இல்லாத அமைச்சர் !!!i
திருந்தமாட்டார்கள் ………..!
எது எப்படியோ மாஇகா காரனுங்க கொஞ்சம் ரோசகரனுங்க ரொம்ப நாளைக்கு அப்பரும் ,,,,,,,,,,56 வருசமா அம்னோ எஜமானுக்கு தங்களது விசுவாசதை நினைவு படுத்தறாங்க
தேர்தல் நேரம் என்பதால் ம.இ.கா.வினருக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கும்,bn வெற்றிபெற்றால் ம.இ.கா.வினருக்கு அரைதான் கிடைக்கும் ,
இந்த ஆர்பாட்டம் எல்லாம் தேர்தல்லுகு பிறகு புஷ் வனம் ஆகிவிடும் மக்களே சிந்தித்து செயல் படுவீர்கள் வெந்த புண் இல் வேல் பாய்ச்சிகிரவனுகும் தட்டி கேட்பதிற்கு வக்கு இல்லாதவனுக்கும் ஒட்டு போட்டு பின் வருத்தாதீர் !!!!!!!!!!!!!!!!!!!!1
சுப்ரமணியமானவரே, தங்கள் வாய் மலர்ந்து, தீபாவின் குழந்தையை சிவில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஒத்தவாறு, அவர் குழந்தையை அவரிடமே ஒப்படைக்க IGP உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களால் சொல்ல முடியவில்லையே ஏன்?. இது தங்களுடைய தேர்தல் வியூகத்தில் சேர்க்கபடாத விஷயம் அல்லது பேசக்கூடாத விஷயம் என்பதாலா?. ஆதாலால், இதைப் பற்றி எல்லாம் பேசமாட்டீர்கள். அப்படிதானே?. முருகனின் ஆரியப் பெயரை வைத்துக் கொண்டு இப்படி தமிழர்களுக்குத் துரோகம் செய்யலாமா?. சுப்பிரமணி ஆரியமயமாகி விட்டீர்களோ?. தாழ்ந்தோர், ஏழைகள், பாமரர் எனப்படுவோரைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லையோ?. தேர்தல் வெற்றி மட்டும்தான் தங்களுடைய குறியோ?. இப்படியே தொடர்ந்தால், வீழ்வாய் சுப்பிரமணியனே!.
யார் நன்றி கெட்டவர்கள்??? அம்னோ தலைமையில் பாரிசானுக்கு இத்தனை வருடங்களாக வாக்களித்த இந்திய மக்களா நன்றிகெட்டவர்கள்? வெற்றி பெற்று மக்களை ஏமாற்றிய உம்மைப் போன்றோரல்லவா நன்றி கெட்டவர்கள்!!!!!