என்ஜிஓ: உண்மைக்கு நஜிப் அரசாங்கம் ஏகபோக உரிமையாளர் அல்ல

philமாறுபடும்  கருத்துக்களை  முடக்கிப்போடும்  முயற்சிகளை  பிரதமர்  நஜிப்பின்  அரசாங்கம்  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  என்று   நியூ  யோர்கைத்  தளமாகக்  கொண்ட  மனித உரிமை  அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  அவரின்   அதிகாரிகளும்  மக்களின்  குறைகூறல்களுக்கும்  அவற்றை  ஊடகங்கள்  வெளியிடுவதற்கும்  இடமளிக்க  வேண்டும்  என  மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பு  கேட்டுக்கொண்டது.

திரெங்கானு  அரசியல்  நெருக்கடி  கையாளப்பட்ட  விதத்தைக்  கூறைகூறும்  வாசகர்களின்  கருத்துக்களை  வெளியிட்ட  மலேசியாகினிக்கு  எதிராக  வழக்கு  தொடுக்கப்போவதாக  நஜிப்  மிரட்டி  இருப்பதன்  தொடர்பில்  அந்த  என்ஜிஓ  இவ்வாறு  கூறியது.

“தேர்ந்தெடுக்கப்பட்ட  மலேசிய  அரசாங்க  அதிகாரிகள்  உண்மை  என்பது  தங்களின்  ஏகபோக  உரிமை  என்பதுபோல்  நடந்துகொள்ளக்  கூடாது.

“அரசாங்கத்தில்  இருப்பவர்களுக்கு  மாறுபட்ட  கருத்துக்களுக்குச்  செவிசாய்க்கும்  பொறுப்பு  உண்டு”,  என்று  மனித உரிமை  கண்காணிப்பு  அமைப்பின் ஆசிய  துணை இயக்குனர்  பில்  ரோபர்ட்சன்  கூறினார்.