லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம் இரு பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு தம்மிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என கோலாலும்பூர் ஷியாரியா உயர் நீதிமன்றத்தில் மனு செய்துகொண்டிருக்கிறார்.
ஏற்கனவே, அவர் தம் கணவர் ராஜா அஹ்மட் ஷரிரிடமிருந்து மணவிலக்குக் கோரி செய்துகொண்ட மனு சமரசக் குழு ஒன்றால் ஆராயப்பட்டுவரும் வேளையில் நுருல் புதிதாக இந்த மனுவையும் செய்துகொண்டிருக்கிறார்.
சமரசக் குழு, அத்தம்பதியினரின் உறவினர்களையும் ஷியாரியா அதிகாரி ஒருவரையும் கொண்ட ஒரு சுயேச்சைக் குழுவாகும். அது அவர்களின் மணவாழ்க்கை முறிந்து போகாமல் இணக்கம் காண்பதற்கு வழி உண்டா என்று ஆராந்து வருகிறது. ஜூன் 12-க்குள், அது கீழ் ஷியாரியா நீதிமன்றத்திடம் தன் முடிவைத் தெரிவிக்க வேண்டும்.