மா அமைச்சர் ஆக்கப்படுவார் என்று கூறி வாக்காளர்களைக் கவரப் பார்க்கிறது பிஎன்

analysisதெலோக்   இந்தான்  இடைத்  தேர்தலில்  போட்டி  கடுமையாக  இருந்தாலும்  வெற்றி  வாய்ப்பு  இருப்பதாகவே  பிஎன்  கருதுகிறது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், பிஎன் வேட்பாளர்  மா  சியு  கியோங்  வெற்றி  பெற்றால்  அமைச்சராக்கப்படுவார்  என  இன்று  மீண்டும்  கூறி  இருப்பது  அதைத்தான்  காண்பிக்கிறது.

கடந்த  தேர்தலில்  டிஏபி  7,600  வாக்குகள்  பெரும்பான்மையில்  அங்கு  வெற்றி  பெற்றிருந்தாலும்  இம்முறை  வெற்றி  பெறுவது  அவ்வளவு  எளிதாக  இருக்காது  எனக்  கணிக்கப்படுகிறது.

வாக்களிக்க  வருவோர்  எண்ணிக்கை  குறைவாக  இருக்கலாம்  என்பதையும்  பிஎன்  தேர்தல்  இயந்திரம்  நன்கு முடுக்கிவிடப்பட்டு  செயல்பட்டு  வருவதையும்  எண்ணி  டிஏபி  தலைவர்கள்  கலக்கமடைந்திருப்பது  உண்மையே.

இந்திய, சீன  வாக்காளர்கள்  கடந்த  தேர்தலில்  வழங்கியதைப்  போன்ற  முழு  ஆதரவை வழங்குவார்களா  என்பதும்  சந்தேகமே.

அங்கு  இந்தியர்களின்  வாக்குகள்  தேர்தல்  முடிவைத்  தீர்மானிக்கும்  எனக்  கருதப்படுவதால்  பிஎன், பரப்புரையின்  கடைசிக்  கட்டத்தில்  இந்தியர்கள்மீது  முழுக்  கவனத்தைத்  திருப்பியுள்ளது.

இந்த  இடைத்  தேர்தலில்  டிஏபி  மிகப்  பெரிய  வெற்றியைப்  பெறாது  என்பதே  ஆய்வாளர்களின்  கணிப்பாகும்.  டிஏபி-இன் வியூக  இயக்குனர்  ஒங்  கியான்  மிங்-கூட  டிஏபிக்கு  1,000  வாக்குகள்  பெரும்பான்மை  கிடைக்கலாம்  என்றுதான்  எதிர்பார்க்கிறார்.