தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளர், அந்நகரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பை வெளியூர் வாக்காளர்களிடம் விட்டுவிடக் கூடாது என்று உள்ளூர் மக்களிடம் வலியுறுத்தினார்.
வெளியூரிலிருந்து வரும் வாக்காளர்களை “வெளியார்” என்று குறிப்பிட்ட மா, அவர்கள் எதிரணி-ஆதரவாளர்கள் என்றும் உள்ளூர் பிரச்னைகள் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்றும் கூறினார்.
“நம் எதிர்காலத்தை ஏன் வெளியார் தீர்மானிக்க வேண்டும்?” என இன்று இந்திய என்ஜிஓ உறுப்பினர்கள் 200 பேரிடம் பேசியபோது மா வினவினார்.
வெளியூர் வாக்காளர்களும் உள்ளூர் மக்கள்தான். அவர்களுக்கும் நல்லாட்சி நடத்தும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை இருக்கும். உங்களுக்கு, ஆட்சி செய்யும் அம்னோ கட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்பதற்காக வெளியூர் வாக்காளர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவது சரியோ?. உங்கள் கட்சி மீதே உங்களுக்கு நம்பிக்கை இருகின்றதா என்றுதான் இப்பொழுது எமக்கு டவுட்டு!.
வெளியூர் வாக்காளர்கள் என சொல்லி கள்ள ஓட்டுகளை தயார் செய்யும் பி.என். உன்னை ஜெயிக்க வைக்க ஏற்பாடு செய்யும் போது எதற்கு தயக்கம்..?
நீங்கள் வெளியூர் வாக்காளர்களை விமர்சிக்கிறீர்கள். பொதுத்தேர்தலின் போது வெளிநாட்டுக்காரர்களும் ஆவி வாக்காளர்களும் நமது தலைவிதியை நிர்ணயிப்பதாக சிலர் குறைபட்டுக் கொள்கின்றனரே. TI-ல் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் வெளியிடம் சென்று வேலை செய்கின்றனர். வேலை இல்லாத ஊரில் அவர்களுக்கு என்ன வேலை? அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து ஒட்டு போடும் உரிமை இழந்தவர்களா..?!
ஆமாம், எனக்கு ஒரு பெரும் சந்தேகம். நீங்கள் இடைத் தேர்தலில் வென்று அமைச்சராக நியமிக்கப்பட்டால் புத்ரா ஜெயா செல்லாமல் TI-ல் இருந்தே அமைச்சு வேலைகளை கவணீப்பீர்களா.?! ஏன் என்றால் நீங்கள் புத்ரா ஜெயா சென்றுவிட்டால், நீங்கள் வெளியூர்காரர் ஆகிவிடுவீர். ஆக, உங்கள் மதிமிகு கூற்றுபடி நீங்கள் அடுத்த பொதுத்தேர்தலில் உங்கள் சொந்த ஊரிலேயே வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் ஆகி விடுவீரே..?! பார்ப்போம்.
…………நஜிப்க்குகு கொடுத்து சீட் வாங்கியிருப்பான் போலும் அதுதான் நஜிப் மாதிரி கங்குங் மாதிரி பேசறான்