சிரம்பான் உயர் நீதிமன்றம், எஸ். தீபாவின் வழக்கில் அவரின் ஆறு வயது மகனை மதம் மாறிய தந்தை இஸ்வான் அப்துல்லாவிடமிருந்து மீட்டுக்கொடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டு எட்டு நாளாகிறது.
உயர் நீதிமன்றம், பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையை தீபாவுக்கு அளித்த இரண்டாவது நாள் இஸ்வான் ஆறு-வயது மகனைக் கடத்திச் சென்றார்.
சிரம்பான் உயர் நீதிமன்றம், மே 21-இல் பிள்ளையை மீட்டுக் கொடுக்குமாறு போலீசுக்கு உததரவிட்டது.
“அந்த ஆணையின் பிரதி ஒன்றை புக்கிட் அமான் போலீசிடம் மே 23-இல் கொடுத்தோம். போலீசார் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் ஆலோசனை கலக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்கள்.
“ஆனால், இதுவரை முடிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை”, என தீபாவின் வழக்குரைஞர் ஜோன் லொயோங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஒரு சாதாரண இஸ்லாமிய இலாகாவிடம் இருக்கும் அதிகாரம் கூட காவல் துறைக்கு இல்லை! சட்டத்துறைத் தலைவருக்குக் கூட இல்லை! ஏன்? இஸ்வானுக்கு இருக்கும் அதிகாரம் கூட எந்தத் துறைக்கும் இல்லை! நாடு விளங்கிடும்!
காவல்துறைக்கு அதிகாரம் இருக்கின்றது ஆனால் அவன்கள் ஏதும் செய்ய மாட்டான் கள்– இல்லாத காரணங்களை கூறி தள்ளி போடுவதே எழுதப்படாத சட்டம். ஏனெனில் யாரும் நியாயத்துக்காக போராடியவர்கள் இன்று கிடையாது –கற்பாலும் போய்சேர்ந்து விட்டார்
நீதிமன்றத்தின்உத்தரவை அவமதிக்கும் போலீசுக்கு ஏதேனும் தண்டனை உண்டோ???? சட்ட நிபுணர்கள் சற்று விவரிக்கவும்….
இஸ்வான் ஓராங் …….. புன்யா ஓராங்,ஹ ஹ ஹ,நாராயண நாராயண.