முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட்மீது ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் எண்ணற்ற புகார்கள் செய்யப்பட்டுள்ள வேளையில் அவருக்குப் பேரரசர் துன் பட்டம் வழங்கியது சரவாக்கியர்களுக்கு வியப்பளிக்கிறது என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறியுள்ளார்.
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பணக்காரர்ர்களில் ஒருவராகக் கருதப்படும் தயிப், 33 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபின் பிப்ரவரி 28-இல் பதவி விலகினார்.
“பட்டம் கொடுக்கப்படும்வரை அது கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது ஏன்?”, என பா’கிலாலான் சட்டமன்ற உறுப்பினருமான பாரு வினவினார்.
இப்போது உயர்நிலை பட்டம் கிடைக்க பணமே மூலாதாரமாக விளங்குகிறது போலும். மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளாரா என்று யார்தான் பார்க்கிறார்கள்??? சும்மாவா சொன்னார்கள் ஈட்டி எட்டியவரைதான் பாயும், பணம் பாதாளம் வரை பாயுமென்று!!!! பணமென்றால் பிணமும் பல்லிளிக்கும்….