தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் பிற்பகல் மணி 2வரை 52.21 விழுக்காட்டினர் அல்லது 31,286 பேர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் (இசி) கூறியது.
இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாய் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் டிவி 3 செய்தியில் கூறினார். பிற்பகலில் நிலைமை மாறலாம் என்றாரவர்.
இதனிடையே, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், 70விழுக்காட்டினர் வாக்களிப்பர் என எதிர்பார்க்கிறார். வாக்காளர் எண்ணிக்கை குறைந்தால் டிஏபி-இன் வாய்ப்புகளும் குறையலாம் என்றவர் டிவிட்டரில் கூறினார்.
“இது டிஏபி-க்கும் பக்காத்தானுக்கும் ஆபத்து. வாக்காளர் எண்ணிக்கை 80 விழுக்காட்டைத் தாண்ட வேண்டும், அதுதான் நம் வேட்பாளருக்குப் பாதுகாப்பு”, என்று லிம் குறிப்பிட்டார்.
கவலை வேண்டாம் விடுங்கள், வெற்றிக் கனி உங்களுக்குத் தான். வாய்மை உங்களுடன் உள்ளது..
பி.என். வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு நிலம் கிடைக்கும்! அதற்கு ஐ. பி.எப். பொறுப்பு! அங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் மேம்படுத்தப்படும். அதற்கு பழனிவேலு பொறுப்பு! அது போதும்!
bn ipf கரன்களை விடாதிர்கள் ,இந்தியர்களே