இஸ்தான்புல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துருக்கியிலுள்ள மலேசிய தூதரகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
“ஹாடி ஆவாங் இஸ்தான்புல் மருத்துவமனையில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் இன்று காலை தூதரகத்தைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்கும்படி கூறினேன்”, என நஜிப் டிவிட்டரில் கூறி இருந்தார்.
பிரதமர் இப்போது ஆறு-நாள் வருகை மேற்கொண்டு பெய்ஜிங்கில் இருக்கிறார்.
மாராங் எம்பியுமான அப்துல் ஹாடி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்றிரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக இணைய செய்தித்தளம் ஒன்று கூறிற்று.
– Bernama
உங்களின் மனிதாபமானத்திற்கு நன்றி!
ஹடியை அல்லதண்டுய போல கொள்ள சொல்லிருப்பான் அதுதான் உண்மை இவன் எல்லாம் ஒரு பிரதமர் மலேசியா கேவலமான நாடு கரணம் BN நக்கிமவணுங்க ஆட்சி செய்வதால்