தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சீனர்களின் வாக்குகள் பிஎன் பக்கம் சாய்ந்தது அச்சமூகம் ஆளும் கூட்டணி மீது இப்போது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று மசீச தலைவர் லியோவ் தியோங் லாய் கூறுகிறார்.
தெலுக் இந்தான் தொகுதியை டிஎபியிடமிருந்து கெராக்கான் தலைவர் மா சியு கோங் கைப்பற்றியது அரசாங்கத்தை பின் நிருவகிப்பதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவுக்கு சான்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த இடைத்தேர்தலில், சீனர்களின் வாக்குகள் பிஎன்னுக்கு திருப்பியுள்ளதைக் காண்கின்றோம். இது சீன சமூகம் பின் மீதான அதன் நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளது என்பதைக் காட்டுகிறது”, என்று லியோவ் கூறினார்.
என்னமோ சொல்லுறிங்க, நம்….பிட்டோம். அந்த வெற்றிக்கான கூடுதல் ஓட்டு எல்லாம் முன்கூட்டியே போடப்பட்ட அரசு ஊழியர்களுடையதுதானே!.
சீனர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது,,போங்கடா………………
டி எ பியின் மூத்த அங்கத்தினர்களின் இனவாத பிரதிபலிப்பு இந்த இடைத்தேர்தல் முடிவு நன்றாகவே புலப்படுத்தியுள்ளது…ஒரு சீனர் எம் பியாக வரவேண்டுமென்பதே அவர்களின் நோக்கம்….
இனவாத அரசியலை மாற்றி அமைக்க இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்…
பொருளாதாரம் அவர்களின் அடிப்படைத் தேவை. தங்கள் சமூக பொருளாதார, வியாபார மேம்பாட்டுக்கு உதவும் வண்ணம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரையே அவர்கள் தேர்வு செய்வார்கள். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சம். நம்மைப் போல் ‘கோவில், குளம், பள்ளிக்கூடம் (தற்பொழுது புதிதாக சமூக மண்டபம்) மலிவு வீடு, புறம்போக்கு நிலம் என்கிற சிறு வட்டத்திற்குள்ளேயே நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு திருப்தி பட்டுக் கொண்டு இருப்பவர்கள் அல்ல அவர்கள். எல்லா எதிர்கட்சிக் கூட்டத்திற்கும் அலைஅலையாய் திரண்டு வந்து இறுதியில் யாரை முட்டாள்கள் ஆக்கினார்கள் பார்த்தீர்களா? நமது அரசியல் சிந்தனை விரிவடையாதவரை, ஆளும் கட்சியினருக்கு நம்மை ‘வாக்குறுதிகள்’ மூலம் அலைகலைப்பதில் எந்த சிரமமும் இருக்காது. அவர்களை குறை பட்டுக் கொள்வதில் எந்த நன்மையையும் இல்லை. நம்மை மாற்றிக் கொள்வோம்.
பலாப்பழ கொட்டையதாண்டா காட்டுகிறது
அந்த நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்! கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் பறந்து விடும்!
இது BN வெற்றி என இறுமாப்பு வேண்டாம். 238 வாக்குகள் வித்தியாசம். போஸ்டல் வாக்குகள் 460க்கும் மேல் BN க்கு முன்பே பதிவாகி இருந்தும் வெறும் 238 வாக்குகள் வித்யாசம் என்கிற போது உண்மை வெற்றியாளர் DAP தான். உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்.
ஒரு சிறு பெண்ணிடம் வெறும் 238 வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெக்ககேடன வெற்றி !!!