‘எங்களை ஒய்பி என்று அழைக்காதீர்கள்’-பாடாங் செராய் எம்பி

surenஎம்பிகளை ‘ஒய்பி’(மாண்புமிகு)  என்று  அழைப்பதை  நிறுத்த வேண்டும்  என  பாடாங்  செராய்  நாடாளுமன்ற  உறுப்பினர்  என். சுரேந்திரன்  பொதுமக்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“சுதந்திரமான,  ஜனநாயக  நாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளுக்குக்  கெளரவ  விருதுகள்  அளித்து  அவர்களை  மக்களைவிட  மேலானவர்களாக  உயர்த்திவைப்பது  விரும்பத்தக்கதல்ல”.

உண்மையில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  ‘பொதுமக்களின்  வேலைக்காரர்களே’  தவிர  பொதுமக்களின்  எஜமானர்கள்  அல்லர்  என்று  சுரேந்திரன்  கூறினார்.

நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்கள்  விவாதங்களின்போது  ஒருவரை  மற்றவரை  ‘யாங்  பெர்ஹொர்மாட்’(ஒய்பி) என்று   குறிப்பிடுவது  மரபாகும்.

“பொதுமக்கள்  எம்பிகளை  ‘இஞ்சே’,  ‘சே’ அல்லது  ‘புவான்’  என்று  அழைப்பதே  போதுமானது”,  என்றாரவர்.