கேஜே: தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதே போதுமானது

kjடிஏபி  தலைமையகத்துக்கு வெளியில்  நடந்த  ஆர்ப்பாட்டத்துக்குத்  தனிப்பட்ட  முறையில்  ஏற்கனவே  மன்னிப்பு  கேட்டாயிற்று  என்பதால்  பகிரங்க  மன்னிப்பு  கேட்கப்போவதில்லை  என அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கூறினார்.

“தனிப்பட்ட  மன்னிப்போ, பகிரங்க  மன்னிப்போ,  இரண்டும்  ஒன்றுதான்.  டிஏபி-இன்  சொத்துக்களுக்குச் சேதம்  ஏற்பட்டதற்கு  ஏற்கனவே  வருத்தம்  தெரிவித்து  விட்டேன். இழப்பீடு  கொடுக்கவும்  தயாராக இருக்கிறேன்.

“அது  போதும்  என்று  நினைக்கிறேன்”,  என்றாரவர்.