பிரதமர்: ஜிஎஸ்டி கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும்

najஅடுத்த  ஆண்டில்  பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி)  அமலாக்கம்  செய்யப்படும்போது  கிராமப்புற  மக்கள்  அதனால்  பெரிதும்  பயனடைவார்கள்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

ஜிஎஸ்டி அமலாக்கம்  செய்யப்படுவதால்  அரசாங்க  வருமானம்  கூடும். அது  மேம்பாட்டுப்  பணிகளுக்கு, குறிப்பாக  கிராமப்புறப் பகுதிகளின்  மேம்பாட்டுக்கு  உதவும்.

“வருமானம்  கூடும்போது  அதில்  பெரும்பகுதி  கிராமப்புறங்களில்   சாலைகள்,  பள்ளிக்கூடங்கள்,  மருத்துவமனைகள்,  சுகாதார  மருந்தகங்கள்  கட்டுவதற்குப்  பயன்படுத்திக்  கொள்ளப்படும்”, என  நஜிப்,  சரவாக்கில்  காவாய்  டாயாக்  விழாவில்  கூறினார்.