இந்து திருமணத்தில் அதிரடியாக புகுந்த ஜயிஸுக்கு இண்ட்ராப் கண்டனம்

vedamurசிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத் துறை   “ஆர்வக்கோளாற்றால்” எல்லைமீறி  நடந்துகொள்வதைத்  தடுக்க  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  வேண்டும்  என    நாடாளுமன்ற  உறுப்பினர்களை  மலேசிய  இண்ட்ராப்   கேட்டுக்கொண்டுள்ளது.

மணப்பெண்  ஒரு  முஸ்லிம்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு கோயிலில்  நடந்துகொண்டிருந்த  திருமணத்தை  ஜயிஸ்  தடுத்து  நிறுத்தியதை  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  கண்டித்தார்.

முஸ்லிம்கள்  சமயத்தை  விட்டு  விலகிச்  செல்வதைத்  தடுக்கவே  ஜயிஸ் மணப்பெண்ணைத்  திருமண  நிகழ்விலிருந்து  அழைத்துச்  சென்றது  என  ஜயிஸ்  வட்டாரங்கள்  தெரிவித்ததாக  சினார்  ஹரியான்  கூறியது.

“ஜயிஸின் நடவடிக்கை  அது  முஸ்லிம்-அல்லாதாரின்  உணர்வுகளையும்  அவர்களின்  வழிப்பாட்டுத்  தலங்களையும்  மதிப்பதில்லை  என்பதைத்  தெளிவாகக்  காண்பிக்கிறது”, என்று வேதமூர்த்தி  கூறினார்.

“முஸ்லிம்கள்  அவர்களின்  சமயம்  பற்றிப்  பேசினால்  உணர்ச்சி  வசப்படுகிறார்கள். அதே உணர்வு  மற்றவர்களுக்கும்  உண்டு”, என்றாரவர்.