முகநூல் பதிவுக்காக அமைச்சின் கண்காணிப்பில் ஆசிரியை

teacherதம் முகநூல்  பக்கத்தில்   தெலோக்  இந்தான்  டிஏபி  வேட்பாளர்  டியானா  சோபியாவின்  பரப்புரை  சுவரொட்டிகளைப்  பதிவிட்டிருந்த  ஆசிரியை  ஒருவர்  அரசின்  கோபத்துக்கு  ஆளாகியுள்ளனர்.

கல்வி  அமைச்சின்  உயர்  அதிகாரி  ஒருவர்  ஆசிரியையைத்  தொடர்புகொண்டு அது  “அரசாங்க- எதிர்ப்பை”க்  காட்டுவதாகவும்  அதை  அகற்றும்படியும்  “அறிவுறுத்தியுள்ளார்”.

“தொடர்ந்து  கண்காணித்து  வருவோம்  என்றாரவர்”  எனக்  கூறிய  ஆசிரியை  அடுத்த  வாரம்  தாம்  இடமாற்றம்  செய்யப்படலாம்   என்றார்.

“நினைத்தால்  சிறுபிள்ளைத்தனமாக  இருக்கிறது. ஆசிரியர்கள்மீது  பாலியல்  புகார்கள், பள்ளிக்குச்  செல்லாத  அசிரியர்கள்,  வசதிக்குறைவான  பள்ளிகள்  இப்படி  எத்தனையோ  விவகாரங்கள்  இருக்கும்போது  இவர்கள்  முகநூலைக்  கண்காணித்துக்  கொண்டிருக்கிறார்கள்”,  என்றந்த  ஆசிரியை அலுத்துக்கொண்டார்.