சில நாள்கள் ஓய்ந்திருந்து விட்டு இப்போது டிஏபிமீதான தாக்குதல்களை மறுபடியும் தொடங்கியுள்ள ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), டிஏபி-யை ஒருவகை புற்றுநோய் என வருணித்துள்ளது.
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் சோபியா தோல்வி அடைந்தது பற்றிக் கருத்துரைத்த இஸ்மா-வின் அரசியல் பிரிவுச் செயலாளர் ஹஸிஸி அப்துல் ரஹ்மான், சீனர்களின் ஆதிக்கம் கொண்ட அக்கட்சி “மலாய் வேட்பாளரைக் கொண்டு அதன் உண்மையான நோக்கத்தை மறைக்கும் முயற்சியில் தோற்றுப்போனது” என்றார்.
“மலாய்க்காரர்களினதும் பூமிபுத்ராக்களினதும் சிறப்புரிமைகளை ஒழிக்கத்தான் டிஏபி பாடுபடுகிறது.
“டிஏபி புற்றுநோய் போன்றது.அதை அரசியல் களத்திலிருந்தே அகற்ற வேண்டும்”, எனவும் அவர் குறிப்பிட்டார்.
முட்டாள் கண்ட யோசனை .
அப்படியென்றால் இஸ்மாவை எய்ட்ஸ் என்று கொள்ளலாமா?
உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும்.ஏமாற்றி வாழ்பவர்களுக்கு வலிக்கத்தான் செய்யும்.