ஜயிஸின் நடவடிக்கையை ஆதரிக்கிறார் பாஸ் தலைவர்

ridhமணப்பெண்  முஸ்லிம்  என்று  தெரிந்ததும், பெட்டாலிங்  ஜெயாவில்  இந்து  திருமணம் ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்)யின்  செயலை  பாஸ்  தலைவர்  ஒருவர்  தற்காத்துப்  பேசியுள்ளார்.

காதலும்  கல்யாணமும்  முஸ்லிம்களின்  சமய  நம்பிக்கைகளுக்குக்  குழிபறிக்கும்  கருவிகளாக  மாறிவருவதாக பாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ரித்வான்  முகம்மட்  நோர்  எச்சரித்துள்ளார்.

காதலால்  கண்ணிழந்து  “அழிவென்னும்  பள்ளத்தில்”  விழவிருந்த  மணப்பெண்ணை  ஜயிஸ்  மீட்டுக்  கொண்டு வந்திருக்கிறது  என  ரித்வான்  கூறினார்.

ஒரு  முஸ்லிமும்  முஸ்லிம்-அல்லாதவரும்  ஒன்றிணைவது  பெரும்  பாவச் செயலாகும்  என்றாரவர்.